வெள்ளி, 17 அக்டோபர், 2008

நித்யஸ்ரீ !


நின் கானம்,


அது காந்தம் !


அதில் ஏகாந்தம் !!

திங்கள், 13 அக்டோபர், 2008

காதலி


என்னுடன் இல்லை.

ஆனால்
என்னுள் இருக்கிறாள்…

இரவுகள் சில...


எட்டுத் திசைகளினின்றும்

முன்னிரவில் தொடங்கும்
இக்கொரில்லா தாக்குதல்கள்
பின்னிரவில் அடங்கி விடுகிறது

விடிந்ததும் எதிர்ப்படும்

அனைவரும்
தூக்கம் தொலைத்த கண்களுடனும்

வெளிறிய முகங்களுடனும்

ஆங்காங்கே ரத்த துளிகளுடனும்….

மின்வெட்டு

கொசுக்கடி

புழுக்கம்

கண்களின் ஓரத்தில்
கோபமும் இயலாமையும்..

கடந்த சில
காலைகள் இப்படித்தான்
விடிந்து தொலைக்கிறது
வீராச்சாமிக்கு திட்டுகளோடு….

நான் யார் ?


நான் யார்..

நான் ஒரு தமிழ் விரும்பி..


இந்த உலகத்துக்கு

ஏதாவது செய்ய நினைத்து,

நினைத்து நினைத்து,

நினைத்துக் கொண்டு மட்டுமே

இயங்கக் கூடிய

பதர்களில் நானும் ஒருவன்…